மாரியம்மன் கோயிலில் ஆடி பொங்கல் விழா
ADDED :3384 days ago
கீழக்கரை: கீழக்கரை மறவர் தெரு மாரியம்மன் கோயிலில் 54ம் ஆண்டு ஆடி பொங்கல் விழா காப்புகட்டுதலுடன் துங்கியது. நாள்தோறும் அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள், கோலாட்டம், கும்மியாட்டம், ஒயிலாட்டம் நடந்தது. மாலையில் 504 விளக்கு பூஜையில் ஏராளமானோர் பங்கேற்றனர். புதிய பஸ்ஸ்டாண்ட் அருகே காந்தாரியம்மன் கோயிலில் இருந்து பக்தர்கள் பால்குடம், காவடி, அலகுகள் குத்தி ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பெண்கள் பொங்கலிட்டனர், அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.