முனியப்பன் கோவில் ஆடிக்கழுவாடி விழா
ADDED :3384 days ago
கரூர்: கரூர் அருகே, ஆடிக்கழுவாடி திருவிழா மற்றும், 1,008 பால்குட அபிஷேக விழா நடந்தது. கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம், குளிர்ந்தமலையில், முனியப்ப சுவாமி கோவில் உள்ளது. நேற்று காலை, 8 மணிக்கு, ஆடிக்கழுவாடி விழாவையாட்டி, காவிரியாற்றில் இருந்து தீர்த்தம் மற்றும், 1,008 பால்குடம் எடுத்து கொண்டு பக்தர்கள், வேலாயுதம்பாளையம் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக, கேரள செண்டை மேளம் முழங்க ஊர்வலமாக சென்றனர். பின் காலை, 11 மணிக்கு முனியப்ப சுவாமிக்கு தீர்த்தம் மற்றும் பால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, தீபாராதனைக்கு பின், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, ஆடிக்கழுவாடி விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.