உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெத்தநாயக்கன்பாளையம் சிவன் கோவில்களில் ஆடி பிரதோஷ பூஜை

பெத்தநாயக்கன்பாளையம் சிவன் கோவில்களில் ஆடி பிரதோஷ பூஜை

பெத்தநாயக்கன்பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம் தாலுகா பகுதியில், வசிஷ்ட நதிக்கரையை ஒட்டி அமைந்துள்ள கோவில்களில், ஆடி மாத கடைசி பிரதோஷ பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டன.பெத்தநாயக்கன்பாளையம் வசிஷ்ட நதிக்கரையொட்டி அமைந்துள்ள, ஏத்தாப்பூர் சாம்பமூர்த்திஸ்வரர் கோவில், பெத்தநாயக்கன்பாளையம் ஆட்கொண்டேஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களில், பிரதோஷத்தையொட்டி நந்திக்கும், மூலவர்களுக்கும் சிறப்பு அலங்காரம் மற்றும் ஆராதனை நடந்தது. மேலும், கொட்டவாடி, பேளூர் கரடிப்பட்டி கருணாகரரேஸ்வரர் ஆலய பிரதோஷ விழாவையொட்டி, சிவனுக்கு பிடித்தமான கைலாய வாத்தியங்கள் இசைக்கப்பட்டன. நந்தி மற்றும் மூலவர் கருணாகரரேஸ்வரர் மற்றும் உற்சவமூர்த்திகள் சிவன் பார்வதி ஆகியோர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தன. நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !