வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருவிளக்கு பூஜை!
ADDED :3384 days ago
வால்பாறை : வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது. ஆடி மாத கடைசி நாளான நேற்று முன் தினம் கோவிலில் மாலை, 6:00 மணிக்கு பிரதோஷ பூஜை நடைபெற்றது. அதன் பின்னர் சன்னதில் முகப்புவாயிலில் எழுந்தருளியுள்ள விசாலாட்சிக்கு சிறப்பு அபிேஷக பூஜையும், அலங்கார பூஜையும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அம்மனுக்கு திருவிளக்கு பூஜையும் நடந்தது. ஆடி மாத கடைசி நாளில் நடைபெற்ற இந்த திருவிளக்கு பூஜையில் நுாற்றுக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.