மண்டகப்பாடி கிராமத்தில் கூத்தாண்டவர் தேர் திருவிழா
ADDED :3384 days ago
ரிஷிவந்தியம்: மண்டகப்பாடி கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவில் தேர் திருவிழா நேற்று நடந்தது. ரிஷிவந்தியம் அடுத்த மண்டகப்பாடி கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவில் தேர் திருவிழா, கடந்த 9ம் தேதி துவங்கியது. தினமும் இரவு பாரதம் பாடும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று அதிகாலை திருநங்கைகள் தாலி கட்டும் நிகழ்ச்சி நடந்தது. மதியம் 3:00 மணியளவில், தேர் திருவிழா துவங்கியது. தேரில் வைத்து அலங்கரிக்கப் பட்ட 26 அடி உயரமுள்ள கூத்தாண்டவர் சுவாமி சிலையை, பொதுமக்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர். தொடர்ந்து இரவு அரவாணிகள் தாலி அறுக்கும் நிகழ்ச்சி நடந்தது.