திம்பட்டி கோவில் கும்பாபிஷேகம்
ADDED :3384 days ago
கோத்தகிரி: கோத்தகிரி திம்பட்டி ராமகிருஷ்ணர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. இந்த கோவிலில், கடந்த, 12ல் காப்பு கட்டி கொடியே ற்றத்துடன் விழா துவங்கி, தீர்த்தம் கொண்டுவரும் நிகழ் ச்சி நடந்தது. முக்கியத் திருவிழா நாளான நேற்று காலை, 6:00 மணிமுதல் ஸர்வசாதகர் சக்திமலை ஈசானபட்டி விநாயகம் சிவம் குருக்கள் ஆசியுடன், மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில், திம்பட்டி சுற்றுவட்டார கிராமங்களில் இ ருந்து, நூற்றுக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை, ஊர் தலைவர் ÷ தானாகவுடர் தலைமையில், விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.