செங்கழுநீரம்மன் கோவில் தேரோட்டம்
ADDED :3384 days ago
புதுச்சேரி: வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோவில் தேரோட்டம் நாளை ( 19ம் தேதி) நடக்கிறது. புதுச்சேரி வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் ÷ காவில் ஆடி பெருவிழா, கடந்த 10ம் தேதி கணபதி பூஜையுடன் துவங்கியது. தினமும் சுவாமிக்கு அபிஷேகம், ஆராதனை, சுவாமி வீதியுலா நடந் தது. முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா, நாளை (19ம் தேதி) நடக்கிறது. கவர்னர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமி வடம் பிடித்து தே÷ ராட்டத்தை துவக்கி வைக்கின்றனர். சபாநாயகர் வைத்திலிங்கம் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர். தேரோட்டத்தையொட்டி, அரசு சார்பில் நாளை உள்ளூர் (ஆர்.எச்.,) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.