வீரமாத்தி காளியம்மன் உற்சவ விழா
ADDED :3382 days ago
திருப்பூர்: திருப்பூர், கோட்டைக்காடு, வீரமாத்தி காளியம்மன் கோவில், உற்சவ விழா நடந்தது. பொங்கல் சீர், நொய்யல் ஆற்றிலிருந்து அம்மை அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. சமயபுரம் மாரியம்மன் அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். நேற்று காலை, 6:00 மணிக்கு, பெரிய பூஜை நடந்தது. பக்தர்கள், மாவிளக்கு, பொங்கல், முளைப்பாலிகை ஆகியவற்றை ஊர்வலமாக எடுத்து வந்தனர். நேற்று, மாலை வீரமாத்தி காளியம்மன் அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார். கோவில் திடலில், பல்வேறு விளையாட்டு போட்டி நடத்தப்பட்டு, பரிசு வழங்கப்பட்டது. இன்று காலை, மஞ்சள் நீர், குபேர லட்சுமி அலங்காரம், நாளை, காலை 11:30 மணிக்கு, ஸ்ரீ அன்னபூரணி அலங்காரம், அன்னதானம் ஆகியன நடைபெறுகிறது.