உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திண்டுக்கல்லில் ஆவணி அவிட்டம்

திண்டுக்கல்லில் ஆவணி அவிட்டம்

திண்டுக்கல், திண்டுக்கல் மலையடி சீனிவாச பெருமாள் கோயிலில் ஆவணி அவிட்டத்தையொட்டி பூணுால் அணியும் விழா நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்று புதிய பூணுால் அணிந்து கொண்டனர். இதேபோல நாகல்நகர் வரதராஜ பெருமாள் கோயில், அபிராமி அம்மன் கோயில் அருகே ள்ள மண்டபம் பகுதியிலும் நடந்தது. சின்னாளபட்டி அக்கசாலை சித்திவிநாயகர் கோயிலில் திரவிய அபிஷேகத்துடன், மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, மகா தீபாராதனையுடன் பூணுால் பண்டிகை நடந்தது. சுற்றுப்புற பகுதிகளைச்சேர்ந்த ஏராளமானோர், பூணுால் அணிந்து வழிபாடு செய்தனர். சவடம்மன் கோயில், பாதாளபேச்சியம்மன் கோயில், கொபட்டிஉள்ளிட்ட இடங்களில் ஆவணி அவிட்ட சிறப்பு பூஜையுடன் பூணுால் பண்டிகை கொண்டாடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !