உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராகவேந்திரரின் 345வது ஆராதனை விழா துவக்கம்

ராகவேந்திரரின் 345வது ஆராதனை விழா துவக்கம்

ஈரோடு: ஈரோடு காவிரிக்கரை ராகவேந்திர சுவாமி, ஆஞ்சநேய சுவாமி கோவிலில் ராகவேந்திர சுவாமிகளின், 345வது ஆராதனை விழா இன்று துவங்குகிறது. இந்த விழா, 21ம் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி தினமும் காலை, 6 மணிக்கு நிர்மால்ய விசர்ஜன வேதபாராயணம், கனகாபிஷேகம், பல்லக்கு, ரத உற்சவங்கள் நடக்கின்றன. தொடர்ந்து பஞ்சாமிர்தம், பால் அபிஷேகம், உபன்யாசம், தீபாராதனை, பிராமண சந்தர்ப்பனை, மங்களாரத்தி நடக்கிறது. பூர்வ, உத்திர ஆராதனைகள் தனியார் சார்பில் நடக்கிறது. கோவில் சார்பில், 20ம் தேதி மத்திய ஆராதனை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !