தர்மபுரி, காரிமங்கலத்தில் ஆவணி அவிட்டத்தையொட்டி பூணூல் மாற்றும் வைபவம்
ADDED :3382 days ago
தர்மபுரி: ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு, நேற்று தர்மபுரி, காரிமங்கலத்தில் பூணூல் மாற்றும் வைபவம் நடந்தது. தர்மபுரி அருணாச்சல சத்திரத்தில், சுக்ல யஜூர், தேவ யாக்ய வல்ய சபா சார்பில், பூணூல் மாற்றும் வைபவம் சென்னை வெங்கடேஸ்வர சாஸ்திரிகள் தலைமையில் நடந்தது. இதில், தமிழ் மற்றும் தெலுங்கு பிராமணர்கள் மற்றும் புதிதாக உபநயனம் ஆன சிறுவர்கள் பங்கேற்று மந்திரங்கள் ஜபித்து பூணூல் போட்டுக் கொண்டனர். காரிமங்கலம் அக்ரஹாரத்தில் உள்ள ராமர் கோவில், காரிமங்கலம் அம்பிகேஸ்வரி அம்மன் கோவில், பழைய பாப்பாரப்பட்டி உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு, நேற்று பூணூல் மாற்றும் வைபவம் நடந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.