சூலுார் ராகவேந்திரருக்கு ஆராதனை விழா
ADDED :3378 days ago
சூலுார் : சூலுார் ஸ்ரீராகவேந்திர சுவாமி மூலமிருத்திகா பிருந்தாவனத்தில் நடந்த ஆராதனை விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சூலுார் கலங்கல் ரோடு ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மூலமிருத்திகா பிருந்தாவன் பிரசித்தி பெற்றது. இங்கு சுவாமிகளின், ஆராதனை விழா கடந்த, 19ம்தேதி துவங்கியது. காலையில், நிர்மால்ய அபிஷேகத்துடன் பூர்வாராதனை துவங்கியது. தொடர்ந்து அபிஷேகம், அர்ச்சனை, நாம சங்கீர்த்தனம் நடந்தது. நேற்று முன்தினம் மத்தியாராதனை பூஜை 6:30 மணிக்கு நடந்தது. கனகாபிஷேகம், மகா தீபாராதனை யில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர். நேற்று உத்திராதனை பூஜை நடந்தது. சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது. விழா ஏற்பாடுகளை ராகவேந்திர சுவாமி சேவா அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.