உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொன்னாங்கன் கோயில் கும்பாபிஷேகம்

பொன்னாங்கன் கோயில் கும்பாபிஷேகம்

செக்கானுாரணி : கருமாத்துார் ஒச்சாண்டம்மன், பொன்னாங்கன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று காலை 2ம் கால பூஜைகள் நடந்தன. காலை 9:00 மணியளவில் வானில் கருடாழ்வார் தோன்றியதை தொடர்ந்து மாயன், பேச்சியம்மன், பெரியதவசி கோயில் கோபுர கலசங்களுக்கு மதுரை சிவாச்சாரியார் கண்ணன் போத்தி தலைமையில் சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றினர். தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பொதுமக்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர். ஏற்பாடுகளை ஆண்டரசன் மக்கள் வகையறாவினர் செய்திருந்தனர். செக்கானுாரணி இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) செல்வம், போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !