உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரிய புராணத்தை வாசித்தால் மனதில் பக்தி உண்டாகும்

பெரிய புராணத்தை வாசித்தால் மனதில் பக்தி உண்டாகும்

அன்னுார் : பெரிய புராணத்தை வாசித்தால் மனதில் பக்தி உண்டாகும் என அன்னுாரில் நடந்த தமிழ்ச்சங்க விழாவில் தெரிவிக்கப்பட்டது. அன்னுார் தமிழ்ச்சங்கம் சார்பில், ஒவ்வொரு மாதமும், மூன்றாவது ஞாயிறன்று, சொற்பொழிவு நடக்கிறது. நேற்று சங்க தலைவர் நடராஜன் தலைமையில் நிகழ்ச்சி நடந்தது. நாகப்பன் வரவேற்றார். திருவாசகம் வாசிக்கப்பட்டது. புலவர் அன்னாசிக்குட்டி பேசுகையில், “தமிழகத்தில் வாழ்ந்த சிறந்த சிவனடியார்களே நாயன்மார்கள் ஆவர். சேக்கிழார், 63 நாயன்மார்களின் வாழ்க்கையை, திருத்தொண்டர் புராணம் என்று அழைக்கப்படும் பெரிய புராணத்தில் தெரிவித்துள்ளார். நாயன்மார்களில் சிலர் மட்டும் சமய நுால்களில் புலமை உள்ளவர்கள். மற்றவர்கள் வேறு தொழில் செய்து வந்தவர்கள். நாயன்மார்களின் அதீத பக்தியின் காரணமாக, இன்றைய தினம் கோவில் சுற்றுப்பிரகாரங்களில், 63 நாயன்மார்களின் சிலைகள் வைக்கப்பட்டு, வணங்கப்படுகிறது. பெரிய புராணத்தை வாசித்தால், பக்தி பெருகும். மாணவர்களுக்கு பெரிய புராணத்தை கற்பிக்க வேண்டும்,” என்றார். புலவர் ராமதாஸ் பேசுகையில், “திருவாசகத்தில், 656 பாடல்கள் உள்ளன. சிவன் மீது மாணிக்கவாசகர் பாடிய பாடல்களின் தொகுப்புதான் இது. தமிழின் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் திருவாசகமும் முக்கியமான ஒன்று. “இறைவனை நாடுபவர்கள் பெற வேண்டிய இயல்புகள், களைய வேண்டியவை குறித்து திருவாசகம் தெளிவாக கூறுகிறது,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !