திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் மஹாஸம்ப்ரோக்ஷணம்!
ADDED :3379 days ago
சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் உள்ள யோக நரசிம்ம ஸ்வாமி விமான ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹாஸம்ப்ரோக்ஷண விழா சிறப்பாக நடந்தது.
108 வைணவ திருத்தலங்களில் மிக முக்கியமானதாக கருதப்படும் பார்த்தசாரதி கோயிலில், கடந்த ஜூன் மாதம் பார்த்த சாரதி சுவாமி, ராமர், ரங்கநாதர், வேதவல்லி தயார் மற்றும் ஆழ்வார், ஆச்சார்யர்களுக்கு திருப்பணிகள் செய்யப்பட்டு மஹாஸம்ப்ரோக்ஷணம் நடைபெற்றது. இன்று (ஆக.22) யோக நரசிம்மர், வரதர், திருமழிசை ஆழ்வார் மற்றும் குளக்கரை ஆஞ்சநேயர் சன்னதி, மற்றும் அனைத்து விமானம், மேற்கு ராஜகோபுரங்களுக்கு மஹாஸம்ப்ரோக்ஷணம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.