உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆனந்த சாய்ராம் தியான கூடத்தில் 25ல் உறியடி விழா

ஆனந்த சாய்ராம் தியான கூடத்தில் 25ல் உறியடி விழா

திருவள்ளூர்;திருவள்ளூர், ஓம் ஆனந்த சாய்ராம் தியான கூடத்தில், வரும் 25ம் தேதி, கோகுலாஷ்டமி விழா நடைபெற உள்ளது.திருவள்ளூர், பெருமாள் செட்டி தெருவில் உள்ள ஆனந்த சாய்ராம் தியான கூடத்தில், வரும் 25ம் தேதி கோகுலாஷ்டமி திருவிழா நடக்கிறது. இதையொட்டி, காலை 6:00 மணிக்கு, சாய்பாபாவிற்கு சிறப்பு பாலாபிஷேகமும், 10:30 மணிக்கு துணி பூஜையும் நடைபெறும்.மதியம் 12:00 மணிக்கு, மத்தியான ஆரத்தியும், மாலை 6:30 மணிக்கு, துாப ஆரத்தியும், இரவு 7:15 மணிக்கு, உறியடி நிகழ்ச்சியும் நடக்கிறது. அன்று இரவு, சாயிபாபா கிருஷ்ணர் அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !