உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பகவதியம்மன் கோவில் புனரமைப்புக்கு பூமி பூஜை

பகவதியம்மன் கோவில் புனரமைப்புக்கு பூமி பூஜை

மோகனூர்: பழமையான வெள்ளாளப்பட்டி பகவதிம்மன் கோவில், புனரமைப்பு பணி, பூமி பூஜையுடன் துவங்கியது. மோகனூர் அடுத்த, வெள்ளாளப்பட்டியில், 100 ஆண்டு பழமையான பகவதியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் கட்டடம் சிதிலமடைந்து காணப்பட்டது. அதனால், கோவிலை புனரமைக்க, ஊர் பொதுமக்கள், கோவில் நிர்வாகிகள் முடிவு செய்தனர். தொடர்ந்து, நேற்று காலை, 7.30 மணிக்கு, புதிய கோவில் கட்டுவதற்காக, பூமி பூஜை மேற்கொள்ளப்பட்டது. தர்மகர்த்தா சுப்ரமணியன் முன்னிலையில் நடந்த விழாவில், கோவில் நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !