உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெங்கடாசலபதி பஜனைக்கூடத்தில் புரட்டாசி கோவிந்த நாம சங்கீர்த்தனம்

வெங்கடாசலபதி பஜனைக்கூடத்தில் புரட்டாசி கோவிந்த நாம சங்கீர்த்தனம்

புரட்டாசி முதல் சனிக்கிழமை துவக்கத்தையொட்டி பஜனைக் கூடத்தில் நேற்று முன்தினம் இரவு 7 மணி முதல் 9 மணி வரை திருமலை கோவிந்தநாம சங்கீர்த்தனம் பஜனை நிகழ்ச்சி நடந்தது. இரவு பக்தர்கள் அனைவரும் திருவந்திபுரம் பெருமாள் கோவிலிக்கு பாதயாத்திரையாக புறப்பட்டு சென்றனர். நேற்று (25ம் தேதி) சிங்கிரிகோவில் பாதயாத்திரை, இன்று 26ம் தேதி திருமலை பாதயாத்திரை மற்றும் விடையாற்றி உற்சவம் நடக்கிறது. மேலும், திருக்கல்யாணம், இரண்டாம் ஆண்டு கருடசேவை, பாண்டுரங்க லீலா, அபங்க பஜனை, ஊஞ்சல் உற்சவம் மற்றும் 48ம் ஆண்டு நிறைவு விழா நிகழ்ச்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !