உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நல்லாத்தூர் பெருமாள் கோவிலில் நவராத்திரி உற்சவம் 27ல் துவக்கம்

நல்லாத்தூர் பெருமாள் கோவிலில் நவராத்திரி உற்சவம் 27ல் துவக்கம்

புதுச்சேரி:நல்லாத்தூர் வரதராஜப் பெருமாள் கோவிலில் நவராத்திரி உற்சவம் நாளை துவங்குகிறது.வில்லியனூர் அடுத்த நல்லாத்தூர் வரதராஜப் பெருமாள் கோவில், நவராத்திரி உற்சவ விழா நாளை (27ம் தேதி) துவங்கி அக்டோபர் 6ம் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.விழாவை முன்னிட்டு தினசரி காலை 10 மணிக்கு தாயாருக்கு சிறப்புத் திருமஞ்சனமும், இரவு 7 மணிக்கு பெருமாள் சன்னதி புறப்பாடு மற்றும் அலங்கார தீபாராதனை சாற்று முறை, தீர்த்தப் பிரசாதம் வழங்கப்படும். மச்ச அவதாரம், வெண்ணைத் தாழி, காளிங்கநர்த்தனம், ஸ்ரீவெங்கடாஜலபதி, யோகநாராயணன், பரசுராமர், ராமர், பலராமர், கிருஷ்ணர் ஆகிய அலங்கார சேவை நடக்கிறது. தினமும் இரவு 7.30 மணிக்கு பெருமாள்- தாயார் ஊஞ்சல் சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !