சுகவனேஸ்வரர் கோவிலில் லலிதா சகஸ்ரநாம ஹோமம்
சேலம் : சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில், வரும் 28ம் தேதி முதல் சொர்ணாம்பிகை அம்மனுக்கு குங்கும லட்சார்ச்சனை மற்றும் லலிதா சகஸ்ரநாம ஹோமம் நடக்கிறது. சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில், நவராத்திரி விழாவை முன்னிட்டு, சொர்ணாம்பிகைக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபராதனை, பூஜைகள் நடக்கிறது. வரும் 28ம் தேதி முதல் வரும் 6ம் தேதி வரை ஒன்பது நாட்களுக்கு, நவராத்திரி சிறப்பு பூஜைகள் நடக்கிறது. சொர்ணாம்பிகை அம்மனுக்கு, தினமும் மாலை 6.30 மணிக்கு குங்கும லட்சார்ச்சனை நடக்கிறது. லட்சார்ச்சனைக்கு பயன்படுத்தப்படும் குங்குமம், பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். வரும் 5ம் தேதி, ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம ஹோமம் நடக்கிறது. சரஸ்வதி தேவியின் குருவான மஹாவிஷ்ணு அம்சம் பொருந்திய "ஹயக்ரீவர் அகத்திய மஹரிஷிக்கு உபதேசித்தவைதான் லலிதா சகஸ்ரநாமம் மந்திரம். இந்த மந்திரம், பத்து அர்ச்சகர்கள் மூலம் ஒரே நேரத்தில் அம்மன் சன்னிதியில் ஓதப்படும்.