உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெண்களின் சபரிமலையில் அஸ்வதி பொங்கல் விழா!

பெண்களின் சபரிமலையில் அஸ்வதி பொங்கல் விழா!

நாகர்கோவில்:பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் நடைபெற்ற அஸ்வதி பொங்கல் விழாவில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர் கோவிலில் இருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில்.

கேரளாவில் இருந்து இங்கு தேவி தரிசனம் நடத்த வரும் பெண்கள் தலையில் இருமுடி கட்டுடன் வந்து கும்பிடுவதால் இது பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. மேலும் இந்த கோயில் கடலில் குளித்து வழிபாடு நடைபெறும் ஒரு கோயிலாகவும் விளங்கி வருகிறது.இங்கு ஆவணி மாதம் அஸ்வதி நாளில் பொங்கல் விழா நடைபெறுகிறது. ஆயிரக்கணக்கான பெண்கள் இங்கு கூடி ஒரே நேரத்தில் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபடுவதன் மூலம் ஐஸ்வரியமும், நன்மையும் பெருகும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. நேற்று விழாவை முன்னிட்டு, ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து, குலவையிட்டு அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகம் செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !