உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் மீண்டும் சயனோற்சவம் !

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் மீண்டும் சயனோற்சவம் !

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில், சயனோற்சவம் மீண்டும் வழக்கத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில், நம்பெருமாள் மற்றும் தாயாரை இரவு சயன அறைக்கு அழைத்துச் செல்லும் உற்சவம் தான் சயனோற்சவம். கோயிலில் சயனப்பெருமாள், சயனத் தாயார் சேர்த்தி சேவை மீண்டும் வழக்கத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, நடைசாத்தும் முன், சயனப்பெருமாள் பல்லக்கில் புறப்பட்டு, தாயார் சன்னதியில் எழுந்தருளி தாயாருடன் பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார். இந்த சயனோற்சவம் தரிசனத்தால் தடைபட்ட திருமணம், புத்திரப்பேறு, தம்பதியர் ஒற்றுமை ஏற்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !