தி.மலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ரூ.87 லட்சம் உண்டியல் காணிக்கை
ADDED :3537 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு, தினமும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். பவுர்ணமி நாட்களில், லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்வர். பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தப்படும் பணம் மாதம்தோறும் எண்ணப்படும். அதன்படி, ஆவணி மாத பவுர்ணமி உண்டியல் காணிக்கை, நேற்று கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் எண்ணப்பட்டது. கோவில் இணை ஆணையர் ஹரிப்பிரியா தலைமையில், கோவில் ஊழியர்கள், தன்னார்வலர்கள் உட்பட, 200க்கும் மேற்பட்டோர் இதில் ஈடுபட்டனர். இதில், 87 லட்சத்து, 32 ஆயிரத்து, 020 ரூபாய், 145 கிராம் தங்கம், 580 கிராம் வெள்ளி நகை இருந்தது.