உலக நன்மை வேண்டி கஞ்சிக் கலய ஊர்வலம்!
ADDED :3376 days ago
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த அள்ளூர் ஆதிபராசக்தி வழிபாடு மன்றம் சார்பில் மழை வேண்டியும், நாடு நலம் பெற வேண்டியும் கஞ்சிக் கலயம் மற்றும் தீச்சட்டி ஊர்வலம் நடந்தது. முன்னதாக வழிபாடு மன்றத்தில் நடந்த சக்தி கொடியேற்று விழாவிற்கு பாலமுருகன் தலைமை தாங்கினார். குணசேகரன் முன்னிலை வகித்தார். உதவிப்பேராசிரியர் எழிலன் சக்தி கொடியேற்றி வைத்தார். தீச்சட்டி மற்றும் கஞ்சிக்கலய ஊர்வலத்தை மாவட்ட பொறுப்பாளர்கள் சக்கரபாணி, பழனி, செல்வராஜ் துவக்கி வைத்தனர். ஊர்வலம் அள்ளூர் ஆதிபராசக்தி வழிபாடு மன்றத்தில் துவங்கி பாழ்வாய்க்கால் வழியாக அன்னதானக்கூடத்தை வந்தடைந்தது. ஆசிரியர் உத்திராபதி தலைமையில் சுவாமி கருடானந்தா அன்னதானம் வழங்கினார்.