வெயிலுகந்த விநாயகர் கோயில் சதுர்த்தி விழா நாளை துவக்கம்
ADDED :3375 days ago
ஆர்.எஸ்.மங்கலம், ,: ஆர்.எஸ்.மங்கலம் அருகில் உள்ள உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. செப்., 5 முடிய விழா தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது. தினமும் மாலையில் வெள்ளி மூஷிக, கேடகம், சிம்ம, மயில், யானை, ரிஷப, காமதேனு, குதிரை, சிம்ம வாகனங்களில் விநாயகர் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக செப்., 3ல் சித்தி, புத்தி தேவியருடன் விநாயகருக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. தமிழகத்தில் இரு தேவியருடன் விநாயகருக்கு திருமணம் நடக்கும் ஒரே கோயில் உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் என்பது குறிப்பிடத் தக்கதாகும். செப்., 4ல் தேரோட்டம், 5ல் தீர்த்தவாரி நடக்கிறது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான நிர்வாகிகள், பக்தர்கள் செய்து வருகின்றனர்.