உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடக்கிலுள்ள கிருஷ்ணன் கோவில்கள்!

வடக்கிலுள்ள கிருஷ்ணன் கோவில்கள்!

குஜராத் மாநிலம் துவாரகையில் கோவில் கொண்டிருக்கும் கண்ணனுக்கு துவாரகாதீசன் என்று பெயர். ஜகத் மந்திர் என அழைக்கப்படும் இந்த ஆலயத்தின் பிரதான வாசலுக்கு, சுவர்க்க துவாரம் என்று பெயர். எந்த நேரமும் திறந்திருக்கும் இந்த வாசலைத் தாண்டிச் சென்றால், மோட்ச துவாரம் எனும் வாசல், அதையும் கடந்து சென்றால் கண்ணனின்

தரிசனம் கிடைக்கும். இந்த இரண்டு வாசல்களுக்கும் இடையே தேவகி, பலராமன், ராதை, சத்யபாமா, லட்சுமி, சரஸ்வதி, காயத்ரி ஆகியோரின் சன்னிதிகள் உள்ளன.

ருக்மிணிதேவிக்குத் தனிக்கோயில் உள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் உள்ள பிருந்தாவனத்தில் உள்ளது வம்சீவட். கண்ணன் தனது புல்லாங்குழல் இசையால் கோபியரைக் கவர்ந்த இடம் இது. வம்சீ என்றால் புல்லாங்குழல். வட் என்றால் ஆலமரம். இங்கு அருள்பாலிக்கும் கண்ணனின் பெயர் வம்சீவட விஹாரி. கண்ணன் பல வடிவங்கள் எடுத்து, கோபியர்களுடன் லீலை புரிவதைச் சித்திரிக்கும் ஓவியங்களை இந்தக் கோவிலில் தரிசிக்கலாம், ராமானுஜர், மத்வர் ஆகியோரின் விக்கிரகங்

களையும் சேவிக்க முடியும். மதுராவில் கிருஷ்ணன் அவதரித்த சிறைச்சாலையை ஒட்டி கத்ரகேஷப் தேவ் என்னும் கிருஷ்ணர் கோவில் எழுப்பப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !