உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராம அனுமான் கோவிலில் 127 கோ பூஜை!

ராம அனுமான் கோவிலில் 127 கோ பூஜை!

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே ஸ்ரீ கோகுலாஷ்டமி முன்னிட்டு நடந்த 127 கோ பூஜையை, சிதம்பரம் ரங்காச்சாரியார் சுவாமி துவக்கி வைத்தார். பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுார் ஸ்ரீ ராமர் அனுமார் கோவிலில் ஸ்ரீ கோகுலாஷ்டமியை முன்னிட்டு 127 கோ பூஜை விழா நடந்தது. ராமர் அனுமான் தர்ம பரிபாலன அறக்கட்டளை அறங்காவலர் சீனு என்கிற ராமதாஸ் தலைமை தாங்கினார். கோகுலாச்சாரியார் முன்னிலை வகித்தார். 127 கோ பூஜையை சிதம்பரம் ரங்காச்சாரியார் சுவாமி துவக்கி வைத்தார்.  பி.டி.ஓ., செல்வராஜ், ராம அனுமான் நிர்வாகி செந்தமிழ்ச்செல்வி, விவசாய சங்க தலைவர் விஜயகுமார், சுபாஷ் சந்திரபோஸ், கிராமத் தலைவர் உத்திராபதி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !