உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேட்டுப்பாளையத்தில் கிருஷ்ணஜெயந்தி ஊர்வலம்

மேட்டுப்பாளையத்தில் கிருஷ்ணஜெயந்தி ஊர்வலம்

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையத்தில் கிருஷ்ணஜெயந்தி விழா மற்றும் ஊர்வலம் நேற்று நடந்தது. நுாற்றுக்கணக்கான சிறுவர், சிறுமியர்   கண்ணன், பாமா, ருக்மணி வேடமிட்டு உற்சாகமாக பங்கேற்றனர். மேட்டுப்பாளையம் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில், கிருஷ்ண ஜெயந்தி விழா  மற்றும் ஊர்வலம்  நேற்று நடந்தது. பாக்குகார வீதியில் பூண்டு வியாபாரிகள் சங்கத் தலைவர் ஆறுமுகம் காவி கொடியசைத்து ஊர்வலத்தை துவக்கி  வைத்தார். ஊர்வலத்தில் கண்ணன், ராதா, ருக்மணி வேடமிட்ட நுாற்றுக்கணக்கான சிறுவர், சிறுமியரும், ஆயிரக்கணக்கான பொதுமக்களும் பங்÷ கற்றனர். சென்டை மேளம் முழுங்க, பக்தி பாடல்களுடன் பாடியவாறு புறப்பட்ட ஊர்வலம் அக்ரஹாரம் வீதி, ஊட்டி மெயின் ரோடு, காரமடை ÷ ராடு வழியாக கோஆபரேடிவ் காலனியில் உள்ள ஈ.எம்.எஸ்., திருமண மண்டபத்தை அடைந்தது.ச

இதைதொடர்ந்து, நடந்த விழாவிற்கு மாவட்ட பொருளாளர் வடிவேல் தலைமை வகித்தார். செல்வம் முன்னிலை வகித்தார். விஸ்வஹிந்து பரிஷத்  அகில பாரத செயலாளர் மிலிந்த் ப்ரண்டே, பா.ஜ., மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன், ஆர்.எஸ்.எஸ்., சுரேஷ்குமார் சிறப்புரைய õற்றினர். விழாவில், மேட்டுப்பாளையம் நகர மன்றத் தலைவர் சதீஸ்குமார், கோவை  மாவட்ட பா.ஜ.,துணைத்தலைவர் கலைவாணி பழனிசாமி  உள்ளிட்ட இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர். முன்னதாக கோமாதா பூஜை மற்றும் குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. பஜ்ர ங்தளத்தின்  மாவட்ட இணை அமைப்பாளர் பிரபு ஆனந்த் நன்றி கூறினார்.

சோமனுார்: சோமனுார் அடுத்த கள்ளப்பாளையம் ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ வேணுகோபால  கிருஷ்ணசுவாமி கோவில் பழமையானது.  இங்கு  இன்று காலை, 5:00 மணிக்கு கிருஷ்ண ஜெயந்தி விழா சுதர்ஸன ஹோமத்துடன்  துவங்குகிறது. சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது.  மாலை, 6:30 மணிக்கு ஊஞ்சல்  உற்சவமும், தொடர்ந்து சோமனுார் பாண்டுரங்கன் குழுவினரின் பஜனையும்,  சீனிவாச பெருமாள் குழுவினரின்  நடனமும் நடக்கிறது. நாளை மாலை, 5:00 மணிக்கு ஸ்ரீ பிரசன்ன ஆஞ்சநேய சுவாமிக்கு  அபிஷேகமும், திருவீதி உலாவும் நடக்கிறது. இரவு, 10:00  மணிக்கு உறியடி  உற்சவம் நடக்கிறது. இரு நாட்களும் குழந்தைகள், ராதா கிருஷ்ணர் வேடம்  அணியும் கலை நிகழ்ச்சியும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !