உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெட்டப்பாக்கத்தில் உறியடி திருவிழா

நெட்டப்பாக்கத்தில் உறியடி திருவிழா

நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் அடுத்துள்ள மடுகரை மந்தவெளி திடலில் கோகுலாஷ்டமியை முன்னிட்டு உறியடி  திருவிழா நடந்தது.  மடுகரையில் அமைந்துள்ள சத்தியநாராயண பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. எம்.எல்.ஏ.,விஜயவேணி  சாமி தரிசனம் செய்தார். மாலையில் கிருஷ்ண பகவான் ஆதிசேஷ  வாகனத்தில் வீதியுலா நடந்தது. கிருஷ்ணர் வேடமிட்ட சிறியவர்கள் முதல்  பெரியவர்கள் வரை உறியடி உற்சவ விழாவில் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை கோவில் அறங்காவல் குழு மற்றும் யாதவ குலத்தினர் செய்தி ருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !