உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ண ஜெயந்தி : விழுப்புரத்தில் உறியடி விழா

கிருஷ்ண ஜெயந்தி : விழுப்புரத்தில் உறியடி விழா

விழுப்புரம்: கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு, விழுப்புரத்தில் உறியடி திருவிழா நடந்தது.  விழாவை முன்னிட்டு, விழுப்புரம் வி.மருதுார்  பஜனை கோவில் தெருவில் உள்ள வேணுகோபால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்தது. காலை ௧௦:00 மணியளவில், சிற ப்பு அலங்காரத்துடன் சுவாமி வீதியுலா  நடந்தது. தொடர்ந்து நடந்த உறியடி நிகழ்ச்சியினை முன்னாள் நகர் மன்ற சேர்மன் ஜனகராஜ் துவக்கி  வைத்தார்.  இதில், ம.தி.மு.க., விவசாய அணி செயலாளர் பாபுகோவிந்தராஜ், காங்., நகர தலைவர் செல்வராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற  செயலாளர் தனுசு, தொழிலதிபர் சீனுவாசன், அருள், சம்மந்தம் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.  மேலும், அப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் உறியடித்து, பரிசு பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !