தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் கார்த்திகை அஷ்டமி விழா
ADDED :3483 days ago
தாண்டிக்குடி, தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் கார்த்திகை விழாவும், கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி பூஜையும்நடந்தது. விழாவில் சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை, விளக்குப் பூஜை, பஜன் நடந்தது. சர்வ அலங்காரத்தில் வடை மாலையுடன் கால பைரவர் காட்சியளித்தார். பாலமுருகன் ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த நிலையில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.