உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்ரா பவுர்ணமி: திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்

சித்ரா பவுர்ணமி: திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்

திருவண்ணாமலை: சித்ரா பவுர்ணமி நேற்று இரவு தொடங்கி, இன்று வரைக்கும் உள்ளது. இதனால் திருவண்ணாமலையில் பக்தர்கள் தொடர்ந்து நேற்று முதல் கிரிவலம் சென்றபடி உள்ளனர். திரும்பும் திசையெல்லாம் பக்தர்கள் கூட்டமாக உள்ளது.

திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில்  பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் சென்று வருகின்றனர்.தமிழ்நாடு மட்டு மின்றி பக்கத்து மாநிலங்களில் இருந்தும் திருவண்ணா மலைக்கு பக்தர்கள் வருகின்றனர். அதிலும் சித்ரா பவுர்ணமி கிரிவலம் சிறப்பு மிக்கதாக கருதப்படுகிறது. இன்று சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு நேற்று இரவு முதல் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து வழிப்பட்டு வருகின்றனர். இதனால் திரும்பும் திசையெல்லாம் பக்தர்கள் கூட்டமாக உள்ளது. பக்தர்கள் நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் நின்று சாமிதரிசனம் செய்தனர்.  

பக்தர்களுக்கு உதவி: திருவண்ணாமலைக்கு சித்ரா பவுர்ணமி கிரிவலம் வந்த பக்தர்கள் கூட்டத்தில்  காணாமல் போன நபர்களை காவல்துறையிடம், முறையீடும் உறவினர்களுக்கு கனிவுடன் கேட்டு ஒலிபெருக்கி மூலம் காணாமல் போன நபரின் பெயரை அழைத்து காவல்துறையினர் அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் அருகே பக்தர்களுக்கு உதவினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !