உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேனியில் சிகப்பு பட்டு உடுத்தி தங்கக்குதிரை வாகனத்தில் ஆற்றில் இறங்கிய கள்ளழகர்

தேனியில் சிகப்பு பட்டு உடுத்தி தங்கக்குதிரை வாகனத்தில் ஆற்றில் இறங்கிய கள்ளழகர்

தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு பிறந்ததால் சிகப்பு பட்டு உடுத்தி தங்கக்குதிரை வாகனத்தில் ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளினார்.
 
 தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேதர ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோவில் 250 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த திருக்கோவிலில் இன்று கள்ளழகர் ஆற்றில் இறங்கும் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.  கோவிலில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கொட்டகுடியாற்றில் இன்று கள்ளழகர் தங்கக் குதிரை வாகனத்தில் சிகப்பு பட்டுடுத்தி ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் வெகு விமர்சியாக கொண்டாடப்படுகிறது. மற்ற வைணவ கோயில்கள் போல் இல்லாமல் ஸ்ரீரங்கம் வைதீக முறைப்படி தமிழ் புத்தாண்டு இந்த வருடம் செவ்வாய்க்கிழமை பிறந்ததால் செவ்வாய்க்கு உகந்த சிகப்பு பட்டுடுத்தி கள்ளழகர் தங்கக்குதிரை வாகனத்தில் கொட்ட குடி ஆற்றில் இறங்கிய வைபவம் நடைபெற்றது. போதிய மழையின்மை காரணமாக நீர் வறண்டு போன நிலையில் நேற்று பெய்த மழை காரணமாக குறைவான தண்ணீரே இருந்த காரணத்தினால் சம்பிரதாயத்திற்காக கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம்  நடைபெற்றது. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !