உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சித்தரேவு வரதராஜபெருமாள் கோவில் சித்திரை திருவிழா; மருதாநதியில் இறங்கிய அழகர்

சித்தரேவு வரதராஜபெருமாள் கோவில் சித்திரை திருவிழா; மருதாநதியில் இறங்கிய அழகர்

பட்டிவீரன்பட்டி; சித்தரேவு வரதராஜபெருமாள் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஏப்.20ல் நடந்தது. ஏப்.28ல் திருக்கல்யாணம் நடந்தது. நேற்று வரதராஜபெருமாள் குதிரை வாகனத்தில் சன்னதியிலிருந்து புறப்பட்டு, நேற்று காலை 6:00 மணி அளவில் அய்யம்பாளையம் மருதாநதியில் இறங்கினார். இன்று (மே 2) தசாவதாரம் நடக்கிறது. நாளை (மே 3) கருடாழ்வார் வாகனத்தில் அய்யம்பாளையத்தில் நகர்வலம் வருகிறார். மே 4ல் பூப்பல்லாக்கில் நகர்வலம், மே 5ல் மஞ்சள் நீராடி சன்னதி வந்தடைகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !