சிறுகடம்பூர் கிருஷ்ணர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
ADDED :3526 days ago
செஞ்சி: செஞ்சி சிறுகடம்பூர் கிருஷ்ணர் கோவிலில், ஊஞ்சல் உற்சவம் நடந்தது. செஞ்சி சிறுகடம்பூர் ராதா ருக்மணி சமேத கிருஷ்ணர் கோவிலில் நேற்று கோகுலாஷ்டமி விழா நடந்தது. இதை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை கருட கொடியேற்றமும், ராதா, ருக்மணி, கிருஷ்ணருக்கு சிறப்பு திருமஞ்சனமும், அலங்காரமும் செய்தனர். மாலை ஊரணி பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு மற்றும் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. இரவு 8 மணிக்கு ஊஞ்சல் உற்சவமும், சாமி வீதியுலாவும் நடந்தது.