உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதுரகிரி மலையில் இன்று நவராத்திரி விழா துவக்கம்

சதுரகிரி மலையில் இன்று நவராத்திரி விழா துவக்கம்

வத்திராயிருப்பு: சதுரகிரி மலையில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களின் ஒன்றான நவராத்திரி திருவிழா இன்று துவங்குகிறது. இல்கு நடைபெறும் திருவிழாக்களில் ஆடி அமாவாசை, தை அமாவாசை, நவராத்திரி, சிவராத்திரி திருவிழாக்கள் பிரசித்தி பெற்றவை. நவராத்திரி திருவிழா தவிர மற்ற அனைத்தும் மலையில் எழுந்தருளிய சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம், சுந்தரமூர்த்தி ஆகிய "சுவாமிகளுக்கான திருவிழாவாகும். இ ங்குள்ள பெண் தெய்வமான ஆனந்த வல்லியம்மனுக்காக கொண்டாடப்படும் ஒரே திருவிழா நவராத்திரி விழாவாகும். 10 நாட்கள் நடைபெறும் விழாவில் அம்மன் 9 நாட்களும் 9 விதமான அலங்காரத்தில் எழுந்தருளி, அருள்பாலிப்பார். இறுதிநாளில் அரக்கனை அம்மன் அம்பு எய்து அழிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இந்த ஆண்டு நவராத்திரி திருவிழா இன்று காப்புக்கட்டுடன் துவங்குகிறது. இதனுடன் புரட்டாசி மாத முதல் அமாவாசை விழாவும் நடைபெறவுள்ளது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி ஜவஹர், தக்கார் செந்தில் வேலவன், ஏழூர் சாலியர் சமுதாய நிர்வாகிகள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !