மண்டலாபிஷேகம் நிறைவு: பக்தர்கள் காவடி ஊர்வலம்
ADDED :3442 days ago
க.பரமத்தி: க.பரமத்தி அருகே உள்ள ஆதிரெட்டிபாளையம் வேம்புமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக மண்டல நிறைவு விழாவை முன்னிட்டு காவடி ஊர்வலம் நடந்தது. கரூர் மாவட்டம், க.பரமத்தி பஞ்., யூனியனுக்கு உட்பட்ட ஆதிரெட்டிபாளையம் வேம்புமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதை முன்னிட்டு, நேற்று மண்டலாபிஷேக நிறைவு விழா காலை, 10 மணியளவில் நடந்தது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் கொடுமுடி காவிரியில் இருந்து, தீர்த்தக் காவடி ஊர்வலமாகக் கொண்டு வந்து அம்மனுக்கு அபி ?ஷகம் செய்து வழிபட்டனர். அதன்பின், பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர்.