வீட்டில் என்னென்ன ஹோமங்கள் செய்யலாம்?
ADDED :3372 days ago
வீட்டில் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், ஆயுள் ஹோமம் போன்றவை செய்யலாம். குடும்பத்தினர் பிறந்த நாள், திருமண நாள் போன்ற விசேஷ நாட்களிலும் ஹோமம் நடத்தும் மரபு இருந்தது. பர்த்டே, வெட்டிங்டே என்று பார்ட்டி வைத்து கொண்டாடுவது வெள்ளையர் வரவால் புகுந்தது. இது பிரபலமானவுடன் ஹோமம் செய்வது, கோவிலுக்குப் போவது போன்றவை மறைந்து விட்டன. எனவே வீட்டில் அடிக்கடி ஹோமம் நடத்தலாம். ஆண்டுக்கு ஒருமுறையாவது செய்வது அவசியம்.