வார்த்தை ஜாலத்தில் மயங்காதே!
ADDED :3349 days ago
நபிகள் நாயகம் எதையாவது அழுத்தம் திருத்தமாக சொல்ல வேண்டுமானால், அதை மூன்றுமுறை சொல்லுவார். அப்படி சொன்ன ஹதீஸ் (வசனம்) தான் இது. சொற்களில் மூழ்கி விடுபவர்களுக்கு கேடு தான் என்பதே அந்த வசனம். இதன் பொருள் என்ன? ஒரு பேச்சாளர் மக்களைக் கவர்வதற்காக, தன் பேச்சுத்திறனை வெளிப்படுத்துவார். வார்த்தை அலங்காரங்களில் மக்களை மூழ்கடித்து விடுவார். இதனால் சொல்ல வந்த கருத்து அடிபட்டு போய்விடும். இவ்வாறு கருத்துக்களை விட்டுவிட்டு, சொல் அலங்காரத்தில் மூழ்கி விடுவோர் துன்பத்தையே சந்திப்பார்கள் என அண்ணலார் கூறுகிறார். இன்றைய அரசியல், பொது வாழ்வில் வார்த்தை ஜாலங்களில் மயங்கித் தான் உலகமே இயங்குகிறது. நாயகத்தின் அறிவுரையைப் பின்பற்றி, வார்த்தைகளில் மயங்காமல் நம்மைப் பாதுகாத்துக் கொள்வோம்.