பரனூர் பக்தகோலாகலனுக்கு கோவிந்த பட்டாபிஷேகம்!
ADDED :3347 days ago
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அடுத்த பரனூர் ஸ்ரீ ராதிகாரமண பக்த கோலாகலனுக்கு, கோவிந்த பட்டாபிஷேக வைபவம் நடந்தது. திருக்கோவிலூர் அடுத்த பரனூர் ஸ்ரீ ராதிகாரமண பக்த கோலாகலன் கோவில் ஸ்ரீ ஜெயந்தி பிரம்மோத்சவ விழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கோவிந்த பட்டாபிஷேகம் நடந்தது. காலை 9:00 மணிக்கு ராதிகா ரமண பக்த கோலாகலன் ஆஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி நந்தவன தோட்டத்தில் எழுந்தருளினார். ஸ்ரீ கிருஷ்ணப்ரேமி சுவாமிகள் தலைமையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனையுடன் கோவிந்த பட்டாபிஷேக வைபவங்கள் நடந்தது. இரவு சுவாமி அனுமந்த வாகனத்தில் வீதியுலா நடந்தது.