ஆறுபடை வீடுகள் ஏன்?
ADDED :3347 days ago
சித்தர்கள் ஞானிகளின் குருவான முருகனுக்கு ஆறுபடை வீடு நம் முன்னோர்கள் அமைத்ததன் ரகசியம் என்ன தெரியுமா? மனிதன் இந்த பூமியில் நிறைவான வாழ்க்கை வாழ ஆரோக்கியம், உறவுகள், பொருளாதாரம், அபயம் (பாதுகாப்பு) ஆளுமை, ஞானம் ஆகியவை நிறைவாக இருக்க வேண்டும் என சித்தர்கள் சொல்கின்றனர். அதை பூர்த்தி செய்யும் சக்தியுள்ள இடங்களில் ஆறுமுகன் ஆலயங்கள் அறுபடை வீடாக எழுப்பப்பட்டன. ஆரோக்கியத்திற்கு சுவாமிமலை, உறவுக்கு திருப்பரங்குன்றம், பொருளாதார வசதிக்கு சோலைமலை, பாதுகாப்புக்கு திருச்செந்துõர், ஆளுமை திறனுக்கு திருத்தணி, ஞானம் பெற பழநி ஆகிய தலங்களை தரிசிக்கலாம்.