எளிதில் கரையும் விநாயகர் சிலைகள்: தயாரிப்பு பணி படுஜோர்!
 மணலி: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, எளிதில் கரையக் கூடிய, ரசாயனம் கலக்காத விநாயகர் சிலைகளை தயாரிக்கும் பணி, மணலியில் படுஜோராக நடந்து வருகிறது.  நாடு முழுவதும் வரும் செப்., 5ம் தேதி, விநாயகர் சதுர்த்தி விழா,  விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதைய டுத்து, இந்து அமைப்புகள்  சார்பில், விநாயகர் ஊர்வலங்கள் நடைபெறும். அதில், ஆயிரக்கணக்கான சிலைகள்  ஊர்வலமாக எடுத்துச் செல்லப் பட்டு, நீர்நிலைகளில் கரைக்கப்படும். 
மாசுபடுத்தாத...: இதற்காக  பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து  வருகிறது. குறிப்பாக, திருவொற்றியூர், மணலியில், நீர்நிலைகளை மாசு படுத்தாத, எளிதில் கரையக் கூடிய ரசாயனம் கலக்காத சிலைகளை தயாரிக்கும்  பணியில், இரு வாரங்களாக பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 
ரூ.2,000 முதல்...: பண்ருட்டியில் இருந்து வரவழைக்கப்பட்ட காகித கூழ் மற்றும் கிழங்கு மாவால் சிலைகள் உருவாக்கப்படுகின்றன. 3 அடி முதல்,  13 அடி வரையிலான சிலைகளை தயாரித்து வருகின்றனர்.  தற்போது விநாயகர் சதுர்த்தி நெருங்குவதால், சிலைகளில் இறுதிக்கட்ட பணியாக  வர்ணம் பூசும் பணிகள் நடந்து வருகின்றன. ஆகம விதிகளுக்குட்பட்டு, சிம்ம வாகன விநாயகர், மூஞ்சுறு விநாயகர், கமல விநாயகர் உள்ளிட்ட சி லைகள் தயாராகியுள்ளன. 2,000 முதல் 14 ஆயிரம் ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.