உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதிபாரசக்தி வார வழிபாடு மன்றம் சார்பில் கஞ்சிக் கலய ஊர்வலம்

ஆதிபாரசக்தி வார வழிபாடு மன்றம் சார்பில் கஞ்சிக் கலய ஊர்வலம்

கம்மாபுரம்: கம்மாபுரம் மேல்மருவத்துார் ஆதிபாரசக்தி வார வழிபாடு மன்றம் சார்பில், கஞ்சிக் கலய ஊர்வலம் நடந்தது. இதையொட்டி, கடந்த  27ம் தேதி காலை 9:00 மணியளவில் சிறப்பு பூஜை, மாலை 4:00 மணியளவில் ஏராளமான செவ்வாடை பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தி, பால்குடம்  சுமந்து சென்று வழிபட்டனர். 28ம் தேதி காலை 10:00 மணியளவில் சிறப்பு ஆராதனையைத் தொடர்ந்து ஏராளமான செவ்வாடை பக்தர்கள் கஞ்சிக்  கலயத்தை சுமந்து ஊர்வலமாகச் சென்று நேர்த்திக் கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !