உஜ்ஜயினி காளியம்மன் கோயிலில் யாக பூஜை
ADDED :3350 days ago
பழநி: கடந்த ஜூலை 11ல் பழநி காமராஜ்நகர் உஜ்ஜயினி மகா காளியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து மண்டல காலபூஜைகள் நடந்தது. நேற்று நிறைவு விழாவை முன்னிட்டு புனித நீர் நிரம்பிய கும்ப கலசங்கள் வைத்து சிறப்பு யாகபூஜைகள் நடந்தது. பின் கும்பகலச நீரில் அம்மன் மற்றும் கருப்பணசுவாமிக்கு அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை காட்டப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை இணை ஆணையர் ராஜமாணிக்கம், துணை ஆணையர்(பொ) மேனகா செய்தனர்.