முத்து விநாயகருக்கு கும்பாபிஷேக விழா
ADDED :3360 days ago
கோபி: கோபி, நல்லகவுண்டம்பாளையம் முத்து விநாகயர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று கோலாகலமாக நடந்தது. கடந்த, 28ம் தேதி தீர்த்தம் எடுத்து வரப்பட்டு, விநாயகர் வழிபாடு, முதற்காலயாக பூஜையுடன் துவங்கியது. நேற்று காலை, 4.30 மணிக்கு, இரண்டாம் கால யாக பூஜை, மங்கள இசை, தீபாராதனை நடந்தது. காலை, 6 முதல், 7.30 மணிக்குள், யாக சாலையில் இருந்து, கலசங்கள் புறப்பட்டு, மூலவர் விநாயகருக்கு கும்பாபிஷேகம் சிறப்புடன் நடந்தது. நல்லகவுண்டம்பாளையம், ல.கள்ளிப்பட்டி, கலிங்கியம், கரட்டடிபாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.