கோதண்டராம சுவாமி கோவிலில் பவித்ர உற்சவம்
ADDED :3360 days ago
ஓசூர்: ஓசூர் கோதண்டராம சுவாமி கோவிலில், பவித்ர உற்சவ விழா நேற்று துவங்கியது. ஓசூரில் உள்ள கோதண்டராம சுவாமி கோவிலில், பவித்ர உற்சவ விழா நேற்று துவங்கியது. விழா, நான்கு நாட்கள் நடக்கிறது. விழாவையொட்டி நேற்று மாலை, 6 மணிக்கு, வாஸ்து ஹோமம், அங்குரார்பணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. இன்று (ஆக. 30) காலை, வேதபாராயணம், கும்ப மண்டல பிரதிஷ்டை, முதற்கால ஹோம பூஜை, பெருமாள் புறப்பாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகளும், நாளை (ஆக. 31) மூன்றாம் கால ஹோமம், ஆராதனை மற்றும் செப்டம்பர் 1 ம் தேதி, ஐந்தாம் கால ஹோமம், பெருமாள் புறப்பாடு, நவகலச ஹோமம், மகா நெய்வேத்தியம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடக்கிறது.