உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெள்ளை விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

வெள்ளை விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

ஆத்தூர்: வெள்ளை விநாயகர் கோவிலில், விநாயகர் சதுர்த்தி விழா, கொடியேற்றத்துடன் துவங்கியது. ஆத்தூர், பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில், பழமையான வெள்ளை விநாயகர் கோவில் உள்ளது. வரும், 5ம் தேதி, விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, நேற்று முன்தினம் காலை, 9 மணியளவில், கலச பூஜைகளுடன் விழா துவங்கியது. நேற்று மாலை, 3 மணியளவில், வெள்ளை விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின், வெள்ளி கவச சிறப்பு அலங்காரத்தில், விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதில், ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த, ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !