உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விக்கிரவாண்டியில் உறியடி திருவிழா

விக்கிரவாண்டியில் உறியடி திருவிழா

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உறியடி திருவிழா நடந்தது. விக்கிரவாண்டி திருவேங்கிட மூர்த்தி கோவிலில், உறியடி திருவிழாவை முன்னிட்டு, சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. பின்னர், மாலையில் கிருஷ்ணர் வேடமிட்டு வந்த குழந்தைகளை பாராட்டி, பரிசுகள் வழங்கினர். தொடர்ந்து, உறியடி உற்சவம், சறுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. திருமால் தசாவதார அலங்காரத்தில், வீதியுலா நடந்தது. ஏற்பாடுகளை தர்மகர்த்தா சுகுமார் தலைமையில் யாதவா மகா சபையினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !