பிள்ளையார்பட்டி சதுர்த்திப்பெருவிழா: கமல வாகனத்தில் விநாயகர்!
ADDED :3365 days ago
திருப்புத்தூர்: பிள்ளையார்பட்டி விநாயகர் கோயில் சதுர்த்திப்பெருவிழா ஆறாம் திருவிழாவை முன்னிட்டு நாளை (செப்.1) மாலை கஜமுகசூர சம்ஹாரம் நடைபெறுகிறது.
இக்கோயிலில் சதுர்த்தி பெருவிழா கடந்த ஆக.27ல்கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி காலையில் வெள்ளிக் கேடகத்தில் சுவாமி புறப்பாடும், வாகனங்களில் திருவீதி உலாவும் நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு, கோயிலில் கமல வாகனத்தில் விநாயகர் அருள்பாலித்தார். நாளை 6ம் திருநாளாக கஜமுகசூர சம்ஹாரம் நடைபெறுகிறது. தேவர்களை துன்புறுத்திய யானை முகம் கொண்ட சூரனை விநாயகர் வதம் செய்யும் சூரசம்ஹாரம் மாலை 4 மணி அளவில் கோயில் திருக்குளம் அருகே நடைபெறும். செப்.4ல் தேரோட்டமும், செப்.5ல் தீர்த்தவாரியும் நடைபெறும். சதுர்த்தி விழாவை முன்னிட்டு, கோயில் தெப்பகுளம் அலங்கார மின் விளக்குகளால் ஜெலித்தது.