தேவநாத பெருமாள் கோயிலில் ஹயக்ரீவ ஜெயந்தி விழா!
ADDED :3359 days ago
காஞ்சிபுரம்: செட்டிபுண்ணியம் அருள்மிகு தேவநாத பெருமாள் திருக்கோயிலில் வரும் 13ம் தேதி ஹயக்ரீவ ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. செட்டிபுண்ணியம், தேவநாத பெருமாள் கோயிலில் எழுந்தருளியுள்ள யோக ஹயக்ரீவ பெருமாளுக்கு 13.9.2016 செவ்வாய்க்கிழமையன்று ஹயக்ரீவ ஜெயந்தி விழா கீழ் காணும் நிகழ்ச்சி நிரலின்படி மிக சிறப்பாக நடைபெறவுள்ளது. மாணவ, மாணவியர் மற்றும் பக்தர்கள் அனைவரும் வணங்கி கல்வியில் சிறந்து விளங்க அழைக்கப்படுகிறார்கள்.
நிகழ்ச்சி நிரல்:
13.9.2016 (செவ்வாய்)
காலை: 5.00 மணிக்கு- விஸ்வரூப தரிசனம்
காலை: 6.30 மணிக்கு- திருவாராதனம்
காலை: 7. முதல் பிற்பகல்: 1. மணி வரை- பொதுமக்கள் தரிசனம்
பிற்பகல்: 2.முதல் 3.30 மணி வரை- சிறப்பு திருமஞ்சனம்
மாலை: 4.00 மணிக்கு- பொதுமக்கள் தரிசனம்
இரவு: 8.00 மணிக்கு- திருவாராதனம்
தொடர்புக்கு: 86751 27999